விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2021 10:46 PM IST (Updated: 22 Dec 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட தலைவர் கேசவலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏகாம்பரம், மகளிரணி துணை அமைப்பாளர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயசங்கர், சரவணன், இணை செயலாளர்கள் சிவப்பிரகாசம், குமார் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். 


வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும், 

முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சிவக்குமார், சிலம்புசெல்வன், பக்தவச்சலம், இணை செயலாளர்கள் ஏகாம்பரம், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Next Story