ஏ டி எம் கார்டை மாற்றி கொடுத்து கல்லூரி மாணவியிடம் ரூ 29 ஆயிரம் அபேஸ்


ஏ டி எம் கார்டை மாற்றி கொடுத்து  கல்லூரி மாணவியிடம் ரூ 29 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 22 Dec 2021 10:48 PM IST (Updated: 22 Dec 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஏ டி எம் கார்டை மாற்றி கொடுத்து கல்லூரி மாணவியிடம் ரூ 29 ஆயிரம் அபேஸ் மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகள் நந்தினி (வயது 20). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று மாலை தியாகதுருகம் கடைவீதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் அவரது தாயின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்க்க சென்றார். 
அப்போது நந்தினிக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் உங்களுக்கு ரசீது வரவில்லை மீண்டும் ஒரு முறை செக் பண்ணி பாருங்கள் என கூறினார். உடனே நந்தினி ஏ.டி.எம். எந்திரத்தில் சொருகி இருந்த கார்டை எடுத்தபோது அது தவறி கீழே விழுந்தது. உடனே பின்னால் நின்ற மர்ம நபர் கீழே விழுந்த கார்டை எடுத்துவிட்டு அதே மாதிரியான வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை நந்தினியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நைசாக நழுவி சென்றார். 

சில நிமிடங்களுக்கு பிறகு வங்கி கணக்கில் இருந்து ரூ.29 ஆயிரம் பணம் எடுத்துள்ளதாக நந்தினியிடம் இருந்த அவரது அம்மாவின் செல்போனுக்கு மெசேஜ் வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது வேறு ஏ.டி.எம்.கார்டு என்பது தெரியவந்தது. அதன்பிறகுதான் கீழே விழுந்த தனது ஏ.டி.எம்.கார்டை எடுத்த மர்மநபர் அதை மறைத்துவைத்துவிட்டு அதற்குபதிலாக வேறு ஏ.டி.எம்.கார்டை கொடுத்துவிட்டு ரூ.29 ஆயிரத்தை அபேஸ்செய்தது தெரியவந்தது. 

இதுகுறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து கல்லூரி மாணவியிடம் ரூ.29 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story