சங்கராபுரத்தில் நர்சு தீக்குளித்து தற்கொலை
சங்கராபுரத்தில் நர்சு தீக்குளித்து தற்கொலை
சங்கராபுரம்
சங்கராபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகேஸ்வரி(வயது 39). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
இந்த நிலையில் முருகன் கடந்த 18-ந் தேதி சபரிமலைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரி நேற்று திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்களித்தார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகேஸ்வரியின் சாவுக்கான காரணம் தெரியவில்லை? இது குறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story