கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரையில் நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் சிவகங்கை, விருது நகர், மதுரை, திருச்சி, ராம்நாடு, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி அழகர் மகேந்திரன், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் தலைவர் ஈஸ்வர குமார் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், விருதுகளையும் வழங்கினர். போட்டிகளில் மானாமதுரையைச் சேர்ந்த நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி மாணவர்கள் 20 - க்கும் மேற்பட்டோர் முதல் பரிசுகளை பெற்று சாதனை படைத் தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் சிவநாகர்ஜூன், உமா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story