மாநில அளவிலான சிலம்பம் போட்டி


மாநில அளவிலான சிலம்பம் போட்டி
x
தினத்தந்தி 22 Dec 2021 11:00 PM IST (Updated: 22 Dec 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர், 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
போட்டி
திருப்பத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா கல்லூரியில் சிலம்பம் கலைக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் தமிழர் திருநாள் விழாவை முன்னி்ட்டும் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. 
போட்டியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிலம்பம் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர். போட்டியில் தஞ்சை, முதலிடத்தையும், சிவகங்கை 2-வது இடத்தையும், புதுக்கோட்டை 3-வது இடத்தையும் பிடித்தன. 
போட்டியி்ல் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பதக்கம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். தொடர்ந்து விளை யாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 7 மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கல்வி, அரசு வேலைவாய்ப்பில் சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு 3 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தேசிய விளையாட்டுப் போட்டியிலும் அரசு பாடத்திட்டத்திலும் சிலம்பத்தைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏற்பாடு
 நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக மக்கள் மன்றத்தினர் செய்திருந்தனர்.  விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுந்தர், விவேகானந்த கல்வி அறக்கட்டளை செயலர் சொக்கலிங்கம், மாஸ்டர் சேதுகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டி முடிவில் ஹரிஆகாஷ் நன்றி கூறினார்.

Next Story