பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கைது


பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 11:18 PM IST (Updated: 22 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கைது

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆறுகளில் தொடர்ந்து மணல் கடத்தி வருவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ராஜேஷ்கண்ணனுக்கு புகார்கள் வந்தது. அவருடைய உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் நேற்று அதிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரணாம்பட்டு அருகே ரங்கம்பேட்டை சாத்கர் கானாற்றில் ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

பின்னர் மணல் கடத்தி வந்ததாக கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட் - ஒன்றியக்குழு துணைத் தலைவர் லலிதா ஆகியோரின் மகன் சிலம்பரசன் (வயது 35), ரமாபாய் நகரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ராஜகம்பீரம் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story