வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 22 Dec 2021 11:18 PM IST (Updated: 22 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் பலி

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கனகந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா (வயது 36). வேலூரில் பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் தனது வீட்டிற்கு செல்ல ரோட்டை கடந்தபோது அவர் மீது அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்து விட்டார்.

வேலூர் சாய்நாதபுரம் பாதுஷா நகரைச் சேர்ந்தவர் சல்மான் (30). இவர்  மோட்டார் சைக்கிளில் பெரியம்மா மனுபீ (76) என்பவரை பின்னால் அமரவைத்துக் கொண்டு ஆரணியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். கணியம்பாடி பகுதியில் உள்ள கன்னிக்கோவில் அருகே லாரியை முந்த முயன்றபோது மோட்டார் சைக்கிள், லாரி மீது உரசியதால் கீழே விழுந்ததில் மனுபீக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சல்மான் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பாக வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story