பெண் விவசாயிகள் சங்க மாநாடு
பெரியகுளத்தில் பெண் விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.
பெரியகுளம்:
பெரியகுளத்தில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் ‘விவசாய பெண்களும், விவசாய நிதிநிலை அறிக்கையும்’ என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதற்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பொன்னுத்தாய் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், சர்வோதீப் பெண்கள் இயக்க இயக்குனர் சகாய சங்கீதா, தமிழ்நாடு விவசாய சங்க மதுரை மாவட்ட செயலாளர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில தலைவி ஷீலு, களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க செயலாளர் சித்ராதேவி, நிர்வாகி அருள்செல்வி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். மாநாட்டில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, சிறு தானியங்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாகி பூமாரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story