மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
மணவாளக்குறிச்சி அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்த ஹெல்மெட் அணிந்த மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்த ஹெல்மெட் அணிந்த மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண்ணிடம் நகை பறிப்பு
மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷைலா (வயது 48).
இவர் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு மளிகை கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி வந்தார்.
அந்த சமயத்தில் ஷைலாவிடம் மிட்டாய் வேண்டும் என கூறியுள்ளார். உடனே அந்த ஆசாமி கூறிய மிட்டாயை எடுக்க முயன்றுள்ளார். இந்தநிலையில் திடீரென அந்த நபர் ஷைலா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தார்.
மர்மஆசாமி கைவரிசை
இதனை சற்றும் எதிர்பாராத ஷைலா திடுக்கிட்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் ஷைலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமியை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story