மாநில அளவிலான கேரம் போட்டி
மாநில அளவிலான கேரம் போட்டி
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான கேரம் போட்டி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கேரம் விளையாடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காளீஸ்வரி கல்லூரியின் செயலாளரும், விருதுநகர் மாவட்ட கேரம் கழக தலைவருமான ஏ.பி. செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில கேரம் கழக தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மார்ட்டின் வரவேற்று பேசினார். மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் இருந்து சுமார் 350 மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற்றது. 8 சுற்றில் வெற்றி பெறுபவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இறுதி போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலையில் நடக்கிறது. மாலை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்ட கேரம் கழக செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கேரம் கழகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story