வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்குதல்


வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 22 Dec 2021 6:39 PM GMT (Updated: 2021-12-23T00:09:03+05:30)

வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்கம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்கம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நோய் தாக்குதல்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை தொடங்கி விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெடுங்குளம், மாத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்களில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். 
இந்தநிலையில் நேற்று பத்ரகிரி தாலுகாவிற்கு உட்பட்ட நெடுங்குளம் மற்றும் மாத்தூர் பகுதிகளில் வேளாண் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் அகிலா, துணை வேளாண் அலுவலர் தீபாஜெயந்தி, உதவி வேளாண் அலுவலர்கள் அழகு மாணிக்கவல்லி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் நெற்பயிரில் நோய் தாக்கிய பகுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அழுகல் நோய்
பின்னர் ஆய்வு பணியை மேற்கொண்ட வேளாண்துறை அதிகாரிகள் நெற்பயிர்களில் இலை உறை அழுகல் நோய் மற்றும் இலை உறை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கூறினர். மேலும் நோய் தாக்கிய நெற்பயிர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

Next Story