தேசிய அளவிலான போட்டி


தேசிய அளவிலான போட்டி
x
தினத்தந்தி 23 Dec 2021 12:09 AM IST (Updated: 23 Dec 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான போட்டி

சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறையின் 3-ம் ஆண்டு மாணவிகள் இன்ஸ்ட்டிடியூசன் ஆப் என்ஜினீயரிங் அன்ட் டெக்னாலஜி சார்பில் நடைபெற்ற 150-வது போட்டியில் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டது. போட்டி 3 சுற்றுக்களாக நடைபெற்றது. இறுதி போட்டிக்கு பி.எஸ்.ஆர். கல்லூரியை சேர்ந்த மாணவிகள் முன்னேறினர். ஐ.ஓ.டி. அடிப்படையிலான சுமார்ட் புட் மானிட்டரிங் மற்றும் நியூரல் நெட்ஒர்க் அடிப்படையிலான கிட்னி நோய் கண்டறிதல் என்ற தலைப்பில் மாணவிகள் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்தனர். இதில் மாணவி நந்தினிதேவிக்கு இரண்டாம் பரிசும், மாணவி முனீஸ்வரிக்கு 3-ம் பரிசும் கிடைத்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை மாணவிகள் மற்றும் பேராசிரியர் கருப்பசாமி ஆகியோரை பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, துறைத்தலைவர் வளர்மதி ஆகியோர் பாராட்டினர்.

Next Story