விஷம் குடித்து விவசாயி தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 Dec 2021 12:17 AM IST (Updated: 23 Dec 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளியணை
விவசாயி
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஓந்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45) விவசாயி. இவர் கடந்த 4 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் கடந்த 19-ந்தேதி இரவு வயிற்று வலி அதிகமாக இருக்கவே வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். 
சாவு
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். 
இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story