பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 27). இவர்கள் ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பிரவீன்குமார் அதே பகுதியில் உள்ள மகேந்தர் என்பவருடைய ்துணிக்கடையில் சுமார் 15 வருடத்துக்கு மேலாக வேலை செய்து வருகின்றார். துணிக்கடை உரிமையாளர் மகேந்தரின் மகள் சேத்தனா சவுத்ரி (20). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தந்தையுடன் துணிக்கடையில் உதவியாக இருந்து வந்துள்ளார்.
அப்போது சேத்தனா சவுத்திரிக்கும், பிரவீன் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்பதால் காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி, பிரவீன் குமாரின் சொந்த ஊரான கூத்தம்பாக்கம் கிராமத்திற்கு வந்துவிட்டனர். சேத்தனா சவுத்ரி மாயமானதால் அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பள்ளிகொண்டா அருகே பள்ளிகுப்பத்தில் உள்ள முருகர் கோவிலில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் இருவரும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நேற்று காலை தஞ்சம் அடைந்தனர். அப்போது சேத்தனா சவுத்ரி உயிருக்கு அவரது தந்தையால் ஆபத்து உள்ளது என புகார் மனு ஒன்றை பிரவீன்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்ததும் பிரவீன் குமாரின் பெற்றோரையும் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
Related Tags :
Next Story