விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை
விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வெள்ள நிவாரணம்
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க கணக்கெடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பயிர்க்கடன் வழங்க வேண்டும்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனிநபர் நகைக்கடன் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். வருவாய்த் துறையின் மூலம் யூ.டி.ஆர். பட்டா மாறுதல் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும் தனி நபார் கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் மனுவாக பெற்று கொண்டார். இதில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story