புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Jan 2022 12:04 AM IST (Updated: 1 Jan 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் கடை வீதியில் பொதுமக்கள் வசதிக்காக உயர்மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு சமீபகாலமாக சரிவர எரியாமல் இருந்து வந்தது. இதுகுறித்து  புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை எடுத்து உயர்மின்விளக்கை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் மகாராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த மின்கம்பம் தற்போது சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் விபத்து ஏதும் ஏற்படுமோ? என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மின்கம்பத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
-இளஞ்செழியன் மகாராஜபுரம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புதிய பஸ்நிலையம் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையம் அருகே மதுக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் அந்த மதுக்கடையில் மதுவாங்கி விட்டு ஒரு சிலர் புதிய பஸ்நிலையம் வளாகத்தில் வைத்து மது அருந்துகின்றனர். இதனால் பஸ் ஏற வரும் பெண்கள், சிறுவர்கள், பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகளின் நலனுக்காக புதியபஸ்நிலையம் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், அந்த பகுதியில் மது அருந்தாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story