தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவற்றை வாங்கி செல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக பண்டிகை நாட்களில் விலை உயர்ந்து காணப்படும்.
புத்தாண்டு
இன்று (சனிக்கிழமை) புத்தாண்டு கொண்டாப்படுவதையொட்டி நேற்று தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிேலா ரூ.1,800-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ நேற்று ரூ.200 உயர்ந்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதுபோல் பிச்சிப்பூ ரூ.1500-ல் இருந்து ரூ.250 உயர்ந்து கிலோ ரூ.1750-க்கு விற்பனையானது.
தோவாளை மார்க்கெட்டில் நேற்றைய பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளிபூ ரூ.350, முல்லை ரூ.1,700, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.600, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, கோழிப்பூ ரூ.70, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.240, ஸ்டம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.300, மஞ்சள் கேந்தி ரூ.90, சிவப்பு கேந்தி ரூ.100, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.160, கொழுந்து ரூ.300, மருக்கொழுந்து ரூ.200 என விற்பனையானது.
Related Tags :
Next Story