இறுதி வாக்காளர் பட்டியல் 5-ந் தேதி வெளியீடு


இறுதி வாக்காளர் பட்டியல் 5-ந் தேதி வெளியீடு
x
தினத்தந்தி 1 Jan 2022 12:30 AM IST (Updated: 1 Jan 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் இறுதி வாக்காளர் பட்டியல் 5-ந் தேதி வெளியிடப்படுகிறது.

புதுக்கோட்டை, 
ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டருமான கவிதா ராமு முன்னிலை வகித்தார். 
இறுதி வாக்காளர் பட்டியல்
கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5-ந் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரது பெயரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் பிரமுகர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், ஆர்.டி.ஓ.க்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story