திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடான சாலைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
பலத்த மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒருமாதமாக ஓய்வெடுத்திருந்தது. மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்தது. இதனால் காலை 8 மணி வரை பனி சூழ்ந்து காணப்பட்டது. மேலும் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மேல் சாரல் மழையாக பெய்து சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் மதியம் 1 மணிக்கு மீண்டும் பலத்த மழை பெய்தது. அப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.
இதனால் திண்டுக்கல் நாகல்நகர், பஸ் நிலைய பகுதிகள், திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். பொதுமக்கள் குடைபிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். இந்த மழை இரவு வரை நீடித்தது.
சாரல் மழை
இதேபோல் பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, நத்தம், வடமதுரை, வேடசந்தூர், செம்பட்டி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியதால், அவை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.
குறிப்பாக கொடைக்கானலில் நேற்று காலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது. மழையின்போது குளிர் காற்றும் வீசியது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இருப்பினும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்தனர்.
இதேபோல் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அவர்களும் மழையை பொருட்படுத்தாமல் பழனியில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மரம் சாய்ந்தது
இந்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மழையுடன் வீசிய பலத்த காற்றால் நிலக்கோட்டை அருேக அவையம்பட்டியில், நிலக்கோட்டை-செம்பட்டி சாலையோரம் இருந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, சாலையில் விழுந்த மரத்தை அகற்றினர்.

Related Tags :
Next Story