இன்டர்சிட்டி உள்ளிட்ட ரெயில்களில் பொதுப்பெட்டிகளுக்கான முன்பதிவு ரத்து


இன்டர்சிட்டி உள்ளிட்ட ரெயில்களில் பொதுப்பெட்டிகளுக்கான முன்பதிவு ரத்து
x
தினத்தந்தி 1 Jan 2022 1:19 AM IST (Updated: 1 Jan 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

தென்னக ரெயில்வேயில் இன்டர்சிட்டி உள்ளிட்ட ரெயில்களில் பொதுப்பெட்டிகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

கொரோனா ஊரடங்கால், பொதுமக்களுக்கான ரெயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக பாசஞ்சர் ரெயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பொதுப்பெட்டிகள் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையே, பயணிகளின் தொடர் கோரிக்கை காரணமாக, தென்னக ரெயில்வேயில் ஒரே மண்டலத்துக்குள் இயக்கப்படும் ரெயில்கள் என்ற அடிப்படையில் பொதுப்பெட்டிகளுக்கான முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 3-ந் தேதி முதல் இரு மார்க்கங்களிலும் டி-9 முதல் டி-12 வரையிலான பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 17-ந் தேதி முதல் இரு மார்க்கங்களிலும் டி-7 மற்றும் டி-8 பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. ஏற்கனவே, இந்த ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டியுடன் கூடிய 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story