தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 Jan 2022 1:25 AM IST (Updated: 1 Jan 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஊர் பெயர் பலகை தேவை 
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதன் காரணமாக இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு ஊர் பெயர் தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் ஊர் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம். 
குவிந்து கிடக்கும் குப்பை 
மதுரை புது விளாங்குடி சமாதானம் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை முறையாக அகற்றுவார்களா? 
பாலாஜி, புதுவிளாங்குடி. 
சுகாதார சீர்கேடு 
மதுரை மாநகராட்சி மீனாட்சிநகர், ராமையா நகரில் சாலையின் இருபுறமும் குப்பைகளும், கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் மேல் விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற வேண்டும். 
ஜானகிராமன், மதுரை. 
குண்டும், குழியுமான சாலை 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பல சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குண்டும், குழியுமான சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது முதியவர்களும், நோயாளிகளும், கர்ப்பிணிகளும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, இப்பகுதியில் உள்ள சாலைகளை அதிகாரிகள் சீரமைப்பார்களா? 
பொதுமக்கள், திருப்பத்தூர். 
நாய்கள் தொல்லை 
மதுரை மீனாட்சிநகர், வில்லாபுரம், 6-வது மேற்கு தெருவில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
காவ்யா பாலகிருஷ்ணன், மதுரை. 
போக்குவரத்து நெரிசல் 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் போக்குவரத்து போலீசாைர நியமித்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். 
குமார், வத்திராயிருப்பு. 

Next Story