தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 1 Jan 2022 1:27 AM IST (Updated: 1 Jan 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளூர் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த 15 தினங்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை. 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்-திருப்பைஞ்ஞிலி செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு புளியமரத்தின் ஒரு பகுதி முறிந்து மற்றொரு கிளையின் மீது தொங்கிக்கொண்டு இருக்கிறது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது இந்த மரக்கிளை முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மரக்கிளையை அகற்றினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், மண்ணச்சநல்லூர், திருச்சி.

எலும்புக்கூடான மின் கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்புறம்  அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நார்த்தாமலை, புதுக்கோட்டை.

விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் மரக்கிளைகள்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரத்தின் கிளைகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது மோதும் அளவிற்கு தாழ்வாக உள்ளது. இதனால் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த மரக்கிளைகள் முன்பக்கம் உள்ள கண்ணாடிகள் மீது மோதுவதினால் வாகனங்களின் கண்ணாடி உடைய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் புதிதாக செல்பவர்கள் சாலையில் மரக்கிளைகள் தொங்குவது தெரியாமல் வேகமாக வந்து அதில் மோதினால் கண்ணாடி உடைந்து எதிர் திசையில் வரும் வகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நெய்தலூர், கரூர். 

சாலை, குடிநீர் வசதி வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், வெட்டிவயல் பஞ்சாயத்து, நாராயணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைபெய்தால் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் நடந்து செல்ல கூட முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி இல்லை. அடிகுழாய் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நாராயணபுரம், புதுக்கோட்டை. 

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இப்பகுதியில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜேந்திரன், அகரம்சீகூர், பெரம்பலூர்.

பூட்டியிருக்கும்  கிராம சேவை மையம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, கோமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கிராம சேவை மையம் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கோமங்கலம், புதுக்கோட்டை. 

தார் சாலை அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அண்ணாநகர் முதல் பழங்காவேரி இணைப்பு சாலை மண் சாலையாக உள்ளதால் மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அப்போது அந்த சாலையின் வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெட்டவாய்த்தலை, திருச்சி. 

திருச்சி மீன் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு 
திருச்சி காசிவிளங்கி மொத்த மீன் மார்க்கெட்டில் சிறிய அளவிலான புழுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் இந்த மீன் மார்க்கெட்டின் ஓரத்தில் தெர்மல் பெட்டிகளை ஓரமாக குவித்து வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காசிவிளங்கி, திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி ஆர்.எம்.எஸ்.காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆர்.எம்.எஸ்.காலனி, திருச்சி. 

கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுமா? 
திருச்சி செல்வநகர் பகுதியில் காலியாக உள்ள வீட்டுமனைகளில் மழைநீர் இதுநாள்வரை தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் இரவில் தூக்கம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி. 

மயானப்பாதையை சீரமைக்க வேண்டும் 
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் தேவேந்திரகுல வேளாளருக்கான மயானத்திற்கு செல்லும் பாதை, மெயின்ரோட்டிலிருந்து 700 மீட்டர் நீளத்திற்கு புதர்மண்டி உள்ளது. 
இதனால் சவ ஊர்வலத்தின் போது பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி. 


Next Story