ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் ரெஜினா மேரி தலைமையிலும், மாவட்ட தலைவர் அழகர் செல்வம் முன்னிலையிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மீனவ சங்க மாநில பொதுச்செயலாளர் சின்னத்தம்பி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் பழனி குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் பாலமுருகன், முத்துக்குமார், சக்கணன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் செந்தில்குமார், சமுத்திரம், முத்துமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடல் பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. மீனவர்களுக்கு ஆதரவான தமிழக முதல்-அமைச்சரின் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story