தாய் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தாய் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2022 1:47 AM IST (Updated: 1 Jan 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு அருகே தாய் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

மைசூரு: மைசூரு அருகே தாய் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.

தாய் இறந்த துக்கத்தில்...

மைசூரு மாவட்டம் பிரியபட்டணா டவுன் பகுதியை சேர்ந்தவர் ரக்சிதா(வயது 19). இவர், உன்சூர் டவுனில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே கடந்தாண்டு ரக்சிதாவின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 

தாய் திடீரென இறந்ததால் ரக்சிதா பெரும் துக்கத்திற்கு ஆளானார். ஓராண்டாகியும் தாய் இறந்த துக்கத்தில் இருந்து ரக்சிதா மீளவில்லை. இதனால் அவர், மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் குளியலறைக்கு சென்று ரக்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குளியலறையில், ரக்சிதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பிரியபட்டணா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

பின்னர் தற்கொலை செய்த ரக்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், தாய் இறந்த துக்கத்தில் ரக்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பிரியபட்டணா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story