தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறகைள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
தஞ்சையில் மானோஜிப்பட்டி ஸ்ரீராகவேந்திரா நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளுக்கு செல்ல போதிய சாலை வசதியில்லை. இந்த சாலை மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொதுமக்கள், மானோஜிப்பட்டி, தஞ்சாவூர்.
மின்கம்பம் சீரமைக்கப்பட்டது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நடுகம்மாளர்தெருவில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் இருந்தது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயநிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளிவந்தது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story