கிணறு-கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 மாடுகள் உயிருடன் மீட்பு


கிணறு-கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 மாடுகள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 2:02 AM IST (Updated: 1 Jan 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

கிணறு-கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்.ஏ.ஜி. காலனித் தெருவில் சுமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் ஒரு பசுமாடு தவறி விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து, கிணற்றில் இருந்து மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் 8 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மற்றொரு பசுமாட்டையும், தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Next Story