காதலியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை
காதலியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரிசிகெரே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
ஹாசன்: காதலியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரிசிகெரே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
காதலி கொலை
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா குண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30). தொழிலாளியான இவரும், கிரிபொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த லதாமணி என்பவரும் காலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ராஜசேகரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ராஜசேகர், லதாமணி அதே கிராமத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடிஅமர்ந்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதையறிந்த பெற்றோர், ராஜசேகருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனாலும் ராஜசேகர், லதாமணியுடனான காதலை தொடர்ந்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி லதாமணியை, ராஜசேகர் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை திருடிக்கொண்டு தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து லதாமணியின பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரிசிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை அரிசிகெரே கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை நேற்று நீதிபதி நாராயண பிரசாத் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார். அதில் திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசமாக இருந்து காதலியை கொன்ற ராஜசேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story