சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 2:18 AM IST (Updated: 1 Jan 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

தளவாய்புரம், 
தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. 
சாஸ்தா கோவில் அருவி 
சேத்தூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இது சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க பல்வேறு அருவிகள் உள்ளன. 
தற்போது பள்ளிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு வந்து குளித்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இந்த அருவி சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே சென்று குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 
பாதுகாப்பு
நேற்று இந்த அருவியில் குளிக்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து  200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- 
விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் அருகே உள்ள  இந்த அருவியில் குடும்பத்துடன் குளிக்க பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கிறது. இதனால்தான் இங்கு எண்ணற்ற பேர் குடும்பத்துடன் அடிக்கடி வருகிறார்கள். மேலும் இங்கு இயற்கை காட்சிகள் நிறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story