பூலாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் அறுவடை-விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு


பூலாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் அறுவடை-விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 2:31 AM IST (Updated: 1 Jan 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் அறுவடை தொடங்கி உள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி:
பூலாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்புகள் அறுவடை தொடங்கி உள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரும்புகள் அறுவடை
எடப்பாடி சுற்றுவட்டாரத்தில் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், வலையசெட்டியூர், காட்டூர், பில்லுகுறிச்சி, மூலப்பாரை, நெடுங்குளம் பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. 
இந்த நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்புகளை வழங்குவதால், சேலம், நாமக்கல் தர்மபுரி ஆகிய பகுதியில் உள்ள கூட்டுறவு அதிகாரிகள் இந்த பகுதி விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் மூலமாக கரும்புக்கு ரூ.15 முதல் ரூ.18 வரை விலை பேசி அறுவடை செய்கின்றனர். 
கரும்புகளை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுவதற்காக நேற்று லாரிகளில் ஏற்றிச்சென்றனர். இந்த கரும்புகள் ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
விவசாயிகள் போராட்டம்
இதனிடையே கூட்டுறவுத் துறை அலுவலர்கள் யாரும் இதுவரை கரும்பு கொள்முதல் செய்ய வராத நிலையில் வியாபாரிகள் மூலமே கொள்முதல் செய்யப்படுவதால் நேற்று பூலாம்பட்டி பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி தாசில்தார் விமல் பிரகாசம் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story