புதிதாக 25 பேருக்கு பாதிப்பு: சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


புதிதாக 25 பேருக்கு பாதிப்பு: சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Jan 2022 2:55 AM IST (Updated: 1 Jan 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். புதிதாக 25 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 26 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேர், சேலம் ஒன்றியத்தில் 12 பேர், ஆத்தூர் பகுதியில் 2 பேர், மேட்டூரில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சேலத்தை சேர்ந்த 75 வயதுடைய முதியவரும், 72 வயதுடைய மூதாட்டியும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை 1,729 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story