ஆசனூர் அருகே கரும்புகளை எதிர்பார்த்து ரோட்டில் குட்டியுடன் சுற்றி திரிந்த யானை- வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே கரும்புகளை எதிர்பார்த்து குட்டியுடன் ரோட்டில் சுற்றி திரிந்த யானை வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
ஆசனூர் அருகே கரும்புகளை எதிர்பார்த்து குட்டியுடன் ரோட்டில் சுற்றி திரிந்த யானை வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரும்புகளை தின்பதற்காக...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
வாகனங்களை வழிமறித்தன
அதேபோல் நேற்று காலை கரும்புகளை எதிர்பார்த்து காரப்பள்ளம் வனச்சோதனை சாவடி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் யானை சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் ஒவ்வொன்றையும் வழிமறித்தன. மேலும் குட்டியுடன் யானை அங்கும் இங்கும் சாலையில் உலா வந்தது.
இதனை வாகனங்களில் இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். யானைகளுக்கு பயந்து அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்துக்கு பிறகு குட்டியுடன் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. சாலையில் யானைகள் தொடர்ந்து உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கிவருகின்றனர்.
Related Tags :
Next Story