டி.என்.பாளையம் அருகே கொய்யா காய் என நினைத்து அரளி விதையை தின்ற 4 மாணவர்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி


டி.என்.பாளையம் அருகே கொய்யா காய் என நினைத்து அரளி விதையை தின்ற 4 மாணவர்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 1 Jan 2022 2:56 AM IST (Updated: 1 Jan 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே கொய்யா காய் என நினைத்து அரளி விதையை தின்ற 4 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே கொய்யா காய் என நினைத்து அரளி விதையை தின்ற 4 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகர் மகன் சதிஷ்குமார் (வயது 8), அம்மாசை மகன் உதயகுமார் (8), முருகேசன் மகன் பூவரசன் (8). இவர்கள் 3 பேரும் தாசரிபாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர், அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் நிவேஷ் (7). இவன் அதே பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் 4 பேரும் தாசரிபாளையம் கிராம பகுதியில் நேற்று மதியம் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வேலியில் முளைத்திருந்த அரளி செடியை பார்த்தனர்.
அரளி விதையை தின்றனர்
அதிலுள்ள காய்களை கொய்யா காய் என நினைத்து சாப்பிட முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து செடியில் இருந்த அரளி காய்களை பறித்து சாப்பிட்டனர். பின்னர் மாணவர்கள் 4 பேரும் தங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். வீட்டுக்கு சென்ற மாணவர்கள் வாய் கசப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே பெற்றோர் விசாரித்ததில் அவர்கள் நடந்ததை தெரிவித்துள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் 4 பேரையும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் கொமராபாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன், துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவர்களை பார்த்தார். பின்னர் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் கூறும்போது, ‘அரளி விதை தின்ற 4 பேரும் நலமாக உள்ளனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்’ என்றனர். மேலும் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story