புகார் பெட்டி
புகார் பெட்டி
முட்புதர்கள் அகற்றப்படுமா?
அந்தியூர் அருகே பருவாச்சியில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு பிளாஸ்டிக்கால் ஆன குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றிலும் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டு்ள்ள குழாய்கள் உடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, குடிநீர் பிடிப்பதற்கு போதுமான குழாய்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
ராமசாமி, பருவாச்சி.
ஆபத்தான தடுப்புச்சுவர்
ஈரோடு மணல்மேடு பகுதியில் செல்லும் ஈ.வி.என். ரோட்டில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்புச்சுவரில் கற்கள் பெயர்ந்து ரோட்டில் விழுந்து உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தடுப்புச்சுவரை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
பெயர் பலகை எங்கே?
சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் தாளவாடி என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே செடி, கொடிகள் வளர்ந்து பெயர் பலகையை மறைத்தபடி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எந்த ஊர் என்று தெரியாமல் சிரமப்படுகிறார்கள். உடனே பெயர் பலகையை மறைத்த செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தாளவாடி.
தெருநாய்கள் தொல்லை
ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேட்டுநாசுவம்பாளையம்.
அடிப்படை வசதி
பவானி அருகே சலங்கபாளையம் பேரூராட்சி பகுதியில் சுமார் 124 வீடுகள் உள்ளன. இங்கு 400-க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு சாலை மற்றும் சாக்கடை வசதி இல்லை. ரோட்டோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில்தான் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே எங்கள் பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சலங்கபாளையம்.
மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதி மரப்பாலம் 8-வது வீதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மரப்பாலம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு சென்னிமலை ரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி ரோட்டோரம் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ரங்கம்பாளையம்.
Related Tags :
Next Story