பாளையங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; தொழிலாளி சாவு


பாளையங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 1 Jan 2022 3:19 AM IST (Updated: 1 Jan 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல் தொழிலாளி சாவு

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலகுளம் கீழுர் வடிவேலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது 38). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மேல குளம் - கட்டாரங்குளம் ரோட்டில் இசக்கியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக நீதிராஜன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நீதிராஜனின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story