உத்திரமேரூர் அருகே பல்லவர்கால லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு


உத்திரமேரூர் அருகே பல்லவர்கால லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 1:32 PM IST (Updated: 1 Jan 2022 1:32 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே பல்லவர்கால லகுலீசர் சிலை கண்டறியப்பட்டுள்ளது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பெருங்கோழி கிராமத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த சைவ சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின் அரிய சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிலை 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் லகுலீசர் இரு கால்களையும் மடக்கி சம்மணமிட்டு பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அவர் தலையில் ஜடா பாரமும், இரு காதுகளில் அழகிய குண்டலங்கள் கழுத்தில் ஒட்டிய அணிகலனாக சவடியும் மார்பில் பூணூலும், கைகளில் தோல் வளையங்களும் கை வளையங்களும் உள்ளன. வலக்கையில் தடியை ஏந்தியும் இடக்கையை தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறார். ‌இடக்கை அருகே சிறிய நாகசிற்பம் இடம்பெற்றுள்ளது. இந்த சிலை 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இவ்வாறு உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறினார்.

Next Story