பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்குகள் சீரமைக்கும் பணி
பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்குகள் சீரமைக்கும் பணி
குன்னூர்
குன்னூர் நகராட்சி பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.மாலை 6 மணிக்கு மேல் பஸ் நிலையத்தில் இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியுறும் நிலை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்னூர் நகராட்சி மூலம் பஸ் நிலையம், லாலி ஆஸ்பத்திரி கார்னர், பெட் போர்டு ஆகிய பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த விளக்குகள் பொருத்தப்பட்டதால் உயரத்திலிருந்து வெளிச்சம் கிடைப்பதால் அந்த பகுதி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளும் வெளிச்சம் பெற்று இருந்தன. இந்தநிலையில் குன்னூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 10 விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதனால் பொது மக்கள் அவதியுற்று வந்தனர். இதனை சீரமைக்க வேண்டும் என்று பொது நலஅமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனை தொடர்ந்து உயர்கோபுர மின்விளக்குகளுக்கு தேவையான பல்புகள் பொருத்தப்பட்டு இணைப்புகளிலுள்ள பழுதுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சீரமைப்பு பணி 2 நாட்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story