மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 Jan 2022 4:58 PM IST (Updated: 1 Jan 2022 4:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை
ஆத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புன்னக்காயல் சோதனைச் சாவடி அருகே கடந்த மாதம் கஞ்சா விற்றதாக புன்னக்காயலை சேர்ந்த ஜேசுராஜ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காடுவெட்டி பாலம் அருகில் கஞ்சா விற்ற குலசேகரநத்தம் பகுதியை சேர்ந்த பச்சைபெருமாளை (29) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மணல் திருட்டு
செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட அகரத்தைச் சேர்ந்த ரமேஷ் (29) என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன் (ஆத்தூர்), அன்னராஜ் (ஸ்ரீவைகுண்டம்), அருள் (செய்துங்கநல்லூர்) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு பரிந்துரைத்தனர். அவர் இதுபற்றி தூத்துக்குடி கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
இதனை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

இதுவரை 203 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 25 பேர், மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் உள்பட 203 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story