புகையிலை- மதுபாட்டில் விற்ற 19 பேர் சிக்கினர்


புகையிலை- மதுபாட்டில் விற்ற 19 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 Jan 2022 5:02 PM IST (Updated: 1 Jan 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் புகையிலை மற்றும் மதுபாட்டில் விற்றதாக 19 பேர் சிக்கினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் ஒரு வழக்கும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 3 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும் அதுபோல் மதுவிலக்கு போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய 19 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 379 புகையிலை பாக்கெட்டுகள், 137 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story