ஒக்கரை ஏரிக்கரையில் மீண்டும் விரிசல்


ஒக்கரை ஏரிக்கரையில் மீண்டும் விரிசல்
x
தினத்தந்தி 1 Jan 2022 7:45 PM IST (Updated: 1 Jan 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

ஒக்கரை ஏரிக்கரையில் மீண்டும் விரிசல்

உப்பிலியபுரம், ஜன.2-
உப்பிலியபுரம் அருகே ஒக்கரை ஊராட்சியில் ஒக்கரை ஏரி உள்ளது. சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பி தடுப்பணையை கடந்து செல்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தஏரி நிரம்பியதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரியின் கரையில் கடந்த மாதம் விரிசல் ஏற்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒக்கரை ஏரி கரையில் திடீர் விரிசல் ஏற்பட்டது. சுமார் 30 அடி நீளத்திற்கு இந்த விரிசல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story