திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கு மது விற்பனை
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
திருவாரூர்:
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
109 டாஸ்மாக் கடைகள்
திருவாரூர் மாவட்டத்தில் 109 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மது விற்பனை செய்யப்படும்.
இதில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பை மதுப்பிரியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வதால் மதுவிற்பனை அதிகமாக நடைபெறும்.
ரூ.2 கோடிக்கு மதுவிற்பனை
நேற்று 2022 ஆங்கிலப்புத்தாண்டு பிறந்ததையொட்டி டாஸ்மாக் கடைகளில் கூடுதலான மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அப்போது மதுவிற்பனை எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.
மதுபிரியர்களின் உற்சாகத்தினால் மது, பீர் வகைகள் என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான மதுவகைகள் விற்பனையானது.
Related Tags :
Next Story