கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர்:
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் காகிதகார தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அகல்விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். மேலும் வாசன்நகரில் உள்ள கந்தசாய்பாபா கோவில், பழனியாண்டர் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர், சர்க்கரை விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புத்தாண்டையொட்டி காலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஆங்கிலப்புத்தாண்டு தொடக்கத்தையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆங்கிலப்புத்தாண்டு விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
நீடாமங்கலம் அருேக உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், குருபகவான், சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து குருபகவான் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹரிஹரன், செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சந்தானராமர் கோவில்
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோவில், கோகமுகேஸ்வரர்கோவில், சதுர்வேதவிநாயகர் மகாமாரியம்மன் கோவில், கீழத்தெரு முருகன் கோவில், மேலராஜவீதி விநாயகர்கோவில், லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில்
நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலத்தில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை பிரசாதமாக வழங்கினார். இக்கோவிலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
மன்னார்குடி
மன்னார்குடியில் உள்ள குழந்தை ஏசு திருத்தலம், வ.உ.சி. ரோடு சி.எஸ்.ஐ. வெஸ்ட்லி தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில், காளவாய்கரை முருகன் கோவில், ஜெயங்கொண்டநாதர் கோவில், பழைய தஞ்சை ரோடு செல்வ காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வலங்கைமான்
வலங்கைமான் பகுதிகளில் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது மழை பெய்ததால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. இதேபோல் வலங்கைமான், ஆலங்குடி, கோவிந்தகுடி, ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வடுவூர்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோதாண்டராமர் பஞ்சமுக அனுமார் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக சாமி உலா வந்தார்.
Related Tags :
Next Story