புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை திரளானபக்தர்கள் தரிசனம்


புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை திரளானபக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 1 Jan 2022 9:27 PM IST (Updated: 1 Jan 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்


கள்ளக்குறிச்சி

கோவிந்தராஜ பெருமாள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றன. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜபெருமாள் கோவிலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். 
அதேபோல் சிவகாமசுந்தரி, சிதம்பரேஸ்வரர், காந்தி ரோடு சக்தி விநாயகர், மார்க்கெட் பகுதி கற்பக விநாயகர், மந்தைவெளி முத்து மாரியம்மன், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், ஏமப்பேர் ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

உலகளந்த பெருமாள்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதல் இரவு நடை சாத்தும் வரை சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர், கீழையூர் மாரியம்மன், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

சங்கராபுரம்

சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் வேத கோஷங்கள் முழங்க சக்திவிநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சங்கராபுரம் வெங்கடேச பெருமாள், வாசவி அம்மன், ஏகாம்பரேஸ்வரர், ராமபக்த ஆஞ்சநேயர், முருகன், திரவுபதி அம்மன், தேவபாண்டலம் குந்தவேல் முருகன், பெரியநாயகி அம்மன், ஏரிக்கரை துர்க்கை அம்மன், மகாநாட்டு மாரியம்மன், பார்த்தசாரதி பெருமாள், மணி தீர்த்தஅஞ்சநேயர், பூட்டை மாரியம்மன், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகம், ஆஞ்சநேயர், வடசிறுவள்ளூர் அய்யனார், ரிஷிவந்தியம் அர்த் தநாரீஸ்வரர், திருவரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story