பிரதோஷ வழிபாடு


பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2022 10:00 PM IST (Updated: 1 Jan 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ஆளுகைக்கு உட்பட்டது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயப் புலவர்களால் பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலின் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிறகு சுவாமி - அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சியளித்தனர். சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story