ரூ.21 லட்சம், 22 பவுன் நகைகளுடன் மாயமான சிறுவர்கள் பிடிபட்டனர்


ரூ.21 லட்சம், 22 பவுன் நகைகளுடன் மாயமான சிறுவர்கள் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 1 Jan 2022 10:02 PM IST (Updated: 1 Jan 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

ரூ.21 லட்சம், 22 பவுன் நகைகளுடன் மாயமான சிறுவர்கள் பிடிபட்டனர்

போத்தனூர்

கோவை போத்தனூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான 8-ம் வகுப்பு படிக்கும் மாணவருடன் மாயமானார். இது குறித்து அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எங்க சென்றார்கள்?. என்ன ஆனார்கள்? என்பது தெரியாத நிலை இருந்தது. 

இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் தந்தை வீட்டில் வைத்திருந்த ரூ.21 லட்சம் ரொக்கப்பணம், 22 பவுன் தங்க நகை ஆகியவற்றை காணவில்லை. பணம் நகையை சிறுவர்கள் எடுத்து சென்ற இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான 2 சிறுவர்களும் திருச்சியில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த 2 சிறுவர்களை யும் மடக்கி பிடித்து கோவை அழைத்து வந்தனர். 

அவர்களிடம் விசாரித்த போது, வீட்டில் இருந்து எடுத்து வந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டதாகவும், தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கரும்புக்கடை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story