புத்தாண்டையொட்டி ரூ.5.44 கோடிக்கு மதுவிற்பனை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.5.44 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
வேலூர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.5.44 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
புத்தாண்டு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாக நடைபெறும். புத்தாண்டு பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 114 கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் விற்பனை குறித்து கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 44 லட்சத்துக்கு மதுவிற்பனையானது.
ஆனால் கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையையொட்டி ரூ.4 கோடியே 15 லட்சத்து 34 ஆயிரத்து விற்பனையானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு மதுவிற்பனை குறைந்துள்ளது. மேலும் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ரூ.1,044 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.2 கோடி
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுமார் ரூ.2 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story