கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் புறவழிச்சாலை மேம்பாலத்துக்கு கீழ் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். இவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 3 பேர் பிடிபட்டனர். அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார்(வயது 22), கள்ளக்குறிச்சி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ்(23), கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடியவர் சின்னமாம்பட்டு ராமசாமி மகன் சின்னமணி என்பதும் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சின்னமணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story