விவசாயிகளுக்கு நிவாரண உதவி


விவசாயிகளுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 1 Jan 2022 10:39 PM IST (Updated: 1 Jan 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நயினார்கோவில், 
நயினார்கோவில் யூனியன் ராதாபுளி பஞ்சாயத்து கோபாலபட்டினம் கிராமத்தில் விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் ராதாபுளி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வரப்பு கட்டுதல், பண்ணைக்குட்டை அமைத்தல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டு நீர் பாசனம், மண்பரிசோதனை, கோடைகால உழவு, பசுந்தாள் உரங்கள், மண்புழு உரம் தயாரிப்பு போன்ற திட்டப்பணி செயல் விளக்க கூட்டம், நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கூட்டத்தில் நபார்டு வங்கியின் மண்டல பொது துணை மேலாளர்  உஷா தலைமை தாங்கினார்.ராதாபுளி ஊராட்சி தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். விவேகானந்தா சர்வீஸ் மிஷன் இயக்குனர் பழனி வரவேற்றார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், மண்டல மேலாளர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் பானு பிரகாஷ் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். ஓம்பிரகாஷ் ரமணன் நன்றி கூறினார்.

Next Story