போதகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
நாகர்கோவிலில் போதகர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போதகர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதகர் வீட்டில் திருட்டு
நாகர்கோவில் வடசேரி பராசக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (வயது 63), போதகர். இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆலயத்தில் புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே வீட்டினுள் எபனேசர் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் நகையும் மாயமானது தெரியவந்தது. இரவில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அந்த நகையை திருடி சென்றது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமரா
இதுபற்றி வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை அவர்கள் பதிவு செய்தார்கள்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story