மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி


மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 1 Jan 2022 10:55 PM IST (Updated: 1 Jan 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிநாதன் (வயது 35). கார் டிரைவர். இவர் கடந்த 25-ந் தேதி காலை காய்கறிகள் வாங்குவதற்காக தனது ஊரில் இருந்து மொபட்டில் நல்லம்பள்ளிக்கு சென்றார். அப்போது குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை பகுதியில் வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது மொட் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மணிநாதன் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிநாதன் இறந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story