காரில் கடத்திய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


காரில் கடத்திய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jan 2022 11:16 PM IST (Updated: 1 Jan 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

காரில் கடத்திய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

குழித்துறை:
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வர் ராஜ் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் காரை மடக்கி பிடித்து சோதனையிட்டபோது அதில் மூடை, மூடையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவனந்தபுரம் களியல் புத்தன் வீட்டை சேர்ந்த சந்தோஷ் (வயது 35), வெள்ளறடை ஆறாட்டுக்குழி முட்டைக்கோடு காலனியை சேர்ந்த உதயகுமார் (38) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து, காருடன், 150 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story